Jun 5, 2010

காதல் ஓவியன்

கண் மூடி கண் திறக்கும் முன்
காதல் வந்தது...
வந்த காதல் வழுவடைந்தது
வங்கக்கடலில் மையங்கொள்ளும்
புயலைப் போல...
காதல் புயலில் சிக்கி இருவரும்
விடாமல் நனைகிறோம்
அன்பென்ற மழையில்...

தினமும் ஒரு மணி நேரமாவது
பேசாவிட்டால்
உலகம் இருண்டதாய்
அவள் உணர்கிறாள்

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது
நினைக்காவிட்டால்
மூளை நரம்பும் சுருண்டதாய்
நான் உணர்கிறேன்

நான் ஒரு விஞ்ஞானியாக
இருந்து இருந்தால்
காதல் அலையின் வேகம்
காணத் துடித்து இருப்பேன்

ஓவியனாய் இருப்பதால்
ஒரு சிறிய காகிதம் கிடைத்தாலும்
அவள் படம் தான் வரைகிறேன்.

2 comments:

Siva said...

கல்யானம் சென்சா புயல் வலுவிலந்து கரையை கடக்கும்...!!!

இரமேஷ் இராமலிங்கம் said...

உங்களின் "comment" கவிதையிலும் அருமை நண்பா...