May 26, 2010

பஞ்சாயத்து யூனியன் நடு நிலைப்பள்ளி, சத்திரம்புளியங்குளம்

அந்த இடம் சென்றவுடன்
ஏதோ நினைக்கிறது மனது
என்னவென்று யோசிக்கையில்
அகரம் புகுத்திய ஒன்றாம் வகுப்பு
கைத்தறி ஆசிரியர்
பசையாய் ஒட்டியிருக்கிறார் ஆழ்மனதில்...

கல்லூரி பல சென்றும்
பிறகு கம்பெனி பல மாறியும்
மனம் மட்டும் மாறாமல் நினைத்து மகிழுதே
ஆரம்பக் கல்வி புகட்டிய தமிழரசி டீச்சரையும்...
பக்கத்தில் இருந்து பாசம் காட்டிய பாலாமணி டீச்சரையும்...

கணிதத்தில் கலக்கும் கண்ணன் சாரையும்,
அறிவியலை அருமையாகப் புகட்டும் சங்கர் சாரையும்
ஒழுக்கம் உயிரினும் மேல் என்று எனக்கு உணர்த்திய
தலைமை ஆசிரியர் போஸ் சாரையும்...
எண்ணாத நாளும் உண்டோ
அந்த இடம் சென்று விட்டால்?

2 comments:

Siva said...

என்ன நன்பா, ஏல்லாம் டீச்செர் ஞபகமா வருது? வாதியர் ரொம்ப அடிச்சுடரா???

இரமேஷ் இராமலிங்கம் said...

ஒரு வாத்தியார்
மண்டையில் அடித்த அடியில்
வந்த குருதியை
மறதி நோய் வந்தாலும் மறக்க முடியாது நண்பா...